“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!

Elderly Sim Lim ice cream man

சிங்கப்பூரில் தன்னுடைய வியாபாரம் மோசமாக இருந்தும் கூட விடா முயற்சியாக 89 வயதான ஊழியர் இன்னும் உழைத்து கொண்டிருக்கிறார்.

தொற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அவரின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெண்ணை நாசம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள்: இன்று (மார்ச் 17) நீதிமன்றம் அளித்த உத்தரவு…!

இருப்பினும், சிம் லிம் டவரின் கீழ் பகுதியில் தன்னுடைய ஐஸ்கிரீம் கடையை நடத்திவரும் அவர் இன்னும் அதை விடவில்லை.

இந்த ஆண்டுடன் 89 வயதாகும் “இங்” என்று அழைக்கப்படும் அந்த ஊழியர், இன்றும் தன்னுடைய ஐஸ்கிரீம் சைக்கிளை தினமும் நீண்ட தூரம் ஓட்டி வருகிறார்.

அதாவது, பீச் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜாலான் பெசாரில் உள்ள சிம் லிம் டவர் வரை தனது சைக்கிள் மூலம் தினமும் செல்கிறார் அவர்.

சமீபத்திய பேஸ்புக் (மார்ச் 13) பதிவின்படி, இங் முன்பை விட அதிகமாக குனிந்த நிலையில் காணப்பட்டார், ஆனாலும் கூட உழைப்பை விடவில்லை.

10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அவரை தற்போது ஒப்பிடும் போது, ​​உடல் அளவில் வலு குறைவாகவும், கூன் முதுகுடனும் காணப்படுகிறார் இங்.

ஜாலான் பெசார் பகுதியில் இருக்கும்/செல்லும் பொதுமக்கள் அவரின் கடைக்கு ஆதரவளிக்குமாறு பேஸ்புக் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துணி காயவைக்கும் ரேக் பின்னால் நின்று தவறான செயல் செய்த ஆடவர்… நெட்டில் பரவிய வீடியோ – தூக்கிய போலீஸ்!