மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ள சிங்கப்பூரர்!

Photo: SP Group

உலகில் எரிபொருள்களால் இயக்கப்படும் வாகனங்களால் காற்று மாசுபடுகிறது. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இந்த நிலையில், எரிபொருளுக்கு மாற்றாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள். மேலும், இந்த வாகனங்களை மக்கள் வாங்கும் வகையில், அவர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அரசுகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, மின்சார கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை

குறிப்பாக, சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சிங்கப்பூர் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

லாட்டரியில் “20 கோடி ரூபாய்” வென்ற தமிழக இளைஞர் : கோடீஸ்வரனாகியும் படித்த அரசு பள்ளியை ஆச்சர்யத்தில் உறைய வைத்த செயல்!

இந்த நிலையில், பிரபல தொழிலதிபரும், சிங்கப்பூரருமான சோ வெய் மிங் (வயது 55), உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவாகி வரும் மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ளார். இவரது பின்னணி குறித்து பார்ப்போம். சீனாவில் உள்ள புகழ்பெற்ற ‘வோல்ஸ்வேகன்’ வாகன தயாரிப்பு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ரினால்ட் நிறுவனத்தின் சீன பிரிவின் தலைவராகவும், தலைமை நிர்வாகியாகவும் பணிபுரிந்து வருகிறார். கார் உற்பத்தித்துறையில் மட்டும் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.