சிங்கப்பூரில் உயரும் மின்சார கட்டணம் – நீங்கள் தங்கும் இடத்திற்கு கட்டணம் எவ்வளவு..? – தெரிந்துகொள்ளுங்கள்

Electricity tariff increase
Photo: Google Maps

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.7 சதவீதம் உயரும் என்று SP குழுமம் இன்று (செப் 29) தெரிவித்துள்ளது.

அதாவது சரக்கு மற்றும் சேவை வரி (GST) சேர்க்காமல் ஒரு கிலோவாட்க்கு (kWh) 0.98 சென்ட்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்.

சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, எரிசக்தி செலவுகள் அதிகரித்ததன் காரணமாக இந்த கட்டண உயர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு, GST சேர்க்காமல் தற்போது வரை ஒரு கிலோவாட் மின் கட்டணம் 27.74 காசு என வசூல் செய்யப்படுகிறது.

இனி அக்டோபர் – டிசம்பர் இடையில் அது 28.70 என உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SP Group

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்