சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்

workplace deaths singapore construction workers
Workplace Safety and Health Council

சிங்கப்பூரில் முதல் ஆறுமாத நிலவரப்படி, 14 பேர் வேலையிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், சென்ற 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்துடன் ஒப்புநோக்கையில் 28 வேலையிட மரணங்கள் அப்போது ஏற்பட்டது.

“சிங்கப்பூரர்கள் தான் உலகின் மோசமான ஓட்டுனர்கள்” என கருத்து வெளியிட்ட பெண் – தெறிக்கும் கமெண்ட் பிரிவு

அதாவது பாதி அளவு இறப்பு விகிதம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டுகின்றன.

அதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட “உயர் விழிப்புநிலை பாதுகாப்பு காலம்” தான்.

அந்த பாதுகாப்பு காலம், வேலையிடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மே மாதம் வரை முடிக்கிவிடப்பட்டது.

இதன் காரணமாக மரண விகிதம் குறைந்து இருப்பதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த ஆண்டில், உயரமான இடங்களில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்கள் அதிகம்.

அதில் 5 ஊழியர்களில் நால்வர் கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை அல்லது சேமிப்புக் கிடங்குத் துறையை சேர்ந்தவர்கள் என்பது வருத்தமான தகவல்.

இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து