இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து

Indian Construction worker death in accident at spore
(PHOTO: TODAY)

பாசிர் ரிஸில் இந்திய கட்டுமான ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலையிடத்தில் கடந்த செப். 24 அன்று கேபிள் இணைப்பு பணியை மேற்கொண்டு இருந்த அவர் மீது இரும்பு கம்பி தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

இந்த விபத்து பாசிர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1 இல் அன்று பிற்பகல் 2.15 மணியளவில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

கேபிள் டிரம்மை தாங்கி நிற்க பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்டாண்ட் முறிந்து இந்த விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அன்று மதியம் 2.30 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான ஊழியர் பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறுமியிடம் உறுப்பை வெளிக்காட்டி அநாகரிகம்.. வெளிநாட்டவருக்கு சிறை

ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனையிலேயே அவர் இறந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அவர் அலையன்ஸ் இ&சி (Alliance E&C) நிறுவனத்தில் பணிபுரிந்ததாக MOM குறிப்பிட்டுள்ளது.

வேலையிடத்தில் கேபிள் பதிக்கும் பணிகள் அனைத்தையும் நிறுத்த அந்த நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் “தீபாவளி உணவு சந்தை” – முறுக்கு முதல் ருசியான பிரியாணி வரை இந்திய பாரம்பரியம்