“சிங்கப்பூரர்கள் தான் உலகின் மோசமான ஓட்டுனர்கள்” என கருத்து வெளியிட்ட பெண் – தெறிக்கும் கமெண்ட் பிரிவு

உலகின் மோசமான ஓட்டுனர்கள்
TikTok/Pinkkittywendi

சிங்கப்பூரர்கள் உலகின் மோசமான ஓட்டுனர்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.

சாலையில் செல்லும் மற்றவர்களை பற்றி சிங்கப்பூரர்கள் கவலை கொள்ள மாட்டார்கள் என்று தொழில்முனைவோரான வெண்டி சான் என்ற அந்த பெண்மணி TikTok வீடியோவில் கூறினார்.

இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) அந்த TikTok வீடியோ பகிரப்பட்டது, அதில் அவர்கள் சாலையில் கவனக்குறைவாக நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது TikTok வீடியோ 61,000 மேற்பட்ட பார்வைகளையும் 1,000 மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

கமெண்டில், சிங்கப்பூர் ஓட்டுநர்கள் குறித்த அவரது கருத்தை பல இணையவாசிகள் ஒப்புக்கொண்டனர்.

அதில் ஒருவர், “முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன், அதனால்தான் நான் சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுவதை வெறுக்கிறேன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர், “நான் ஒரு சிங்கப்பூரராக இதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் பல நெட்டிசன்கள் “இது நியாயமான கருத்து அல்ல” என்று வாதிட்டனர்.

“வழிவிட மறுத்த ஒருவருக்காக நீங்கள் முழு நாட்டையும் குற்றம் சாட்டுகிறீர்கள்” என்று ஒரு நெட்டிசன் கூறினார்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

Tiktok Video: https://www.tiktok.com/tag/sgdriver%F0%9F%87%B8%F0%9F%87%AC?refer=embed

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்