சிங்கப்பூர் – பினாங்கு இடையே தினசரி விமானங்களை இயக்கவுள்ள எமிரேட்ஸ்..!

Emirates to operate daily Singapore-Penang flights from April

Emirates to operate daily Singapore-Penang flights : சிங்கப்பூர் மற்றும் பினாங்கு இடையே ஏப்ரல் 9 முதல் புதிய தினசரி விமானத்தை இயக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 28) அறிவித்துள்ளது.

“பினாங்கு நகரத்திற்கு இந்த எமிரேட்ஸ் விமானத்தின் சேவை சிங்கப்பூருடன் இணைக்கப்பட்ட சேவையாக இருக்கும்” என்று எமிரேட்ஸ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 2 புதிய நபர்களுக்கு வூஹான் வைரஸ்; மொத்த எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..!

மேலும், இது எமிரேட்ஸ்-ன் இரண்டாவது மலேசிய இலக்காக இருக்கும். 1996 முதல், தற்போது ஒரு நாளைக்கு மூன்று முறை தலைநகர் கோலாலம்பூருக்கு சேவை இயங்கி வருகிறது.

இந்த புதிய EK 348 விமானம் துபாயில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு சிங்கப்பூர் வந்து, பிற்பகல் 3.35 மணிக்கு பினாங்குக்கு புறப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சிங்கப்பூர் அரசின் புதிய நடவடிக்கைகள்..!

மேலும், EK 349 விமானம் பினாங்கிலிருந்து சிங்கப்பூருக்கு இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு துபாய் சென்றடையும்.

சுற்றுப்பயணத்திற்கும் வர்த்தகப் பயணத்திற்கும் முக்கியத் தளமாக பினாங்கு விளங்குகிறது. இதனால் பினாங்கிற்குச் செல்லும் பயணிகணின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.