மூளைக் கட்டியால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர் – S$50K நன்கொடை வழங்குமாறு முதலாளி கோரிக்கை..!

Employer appeals for S$50K donation for migrant worker, 32, with brain tumour
Employer appeals for S$50K donation for migrant worker, 32, with brain tumour (Photo: Mothership)

சிங்கப்பூரில் இளம் வெளிநாட்டு ஊழியர் ராசு ரவி என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் மூளைக் கட்டி (Brain tumour) இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவரின் முதலாளி அவருக்காக நன்கொடைகளை வேண்டியுள்ளார்.

அவரது முதலாளியின் கருத்துப்படி, 32 வயதான வெளிநாட்டு ஊழியர் கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

அவரது முதலாளி அமைத்த Give Asia appeal page பக்கத்தின்படி, ராசு கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கும் விடுதியில் விழுந்ததில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 40 சதவீதத்தை அகற்ற அவர் அறுவை சிகிச்சை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராசூவுக்கு கீமோதெரபி சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாவும், இதற்காக கூடுதல் செலவு ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சைக்கு பிறகு ராசு உடல்நிலை சீரானதும், வீடு திரும்ப வேண்டியிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

An appeal for a young migrant worker with a brain tumour??This young man is Rasu Ravi, a migrant worker aged 32 who…

Posted by Itsrainingraincoats on Sunday, June 7, 2020

கீமோதெரபி செலவுகள் உட்பட, மருத்துவ செலவினங்களை ஈடுசெய்ய ராசுவுக்கு S$50,000 திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ItsRainingRaincoats தங்கள் பேஸ்புக் பக்கத்தில் இதனை பற்றி பதிவிட்டுள்ளது, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், இனி சிங்கப்பூரில் பணியாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த பட்டியலில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் சேர்ப்பு..!