ஊதியக் கடன் திட்டத்தின் அடுத்த தவணையை மார்ச் மாதத்தில் முதலாளிகள் எதிர்பார்க்கலாம்

singaporeans-happiness survey
Photo: gov.sg

ஊதியக் கடன் திட்டத்தின் (WCS) அடுத்த தவணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதலாளிகள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் தகுதிபெற, தகுதிபெறும் ஊழியர்களுக்கான இந்த ஆண்டு ஊதியத்தில் கட்டாய மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) பங்களிப்புகளை வரும் ஜனவரி 14ஆம் தேதிக்குள் CPF கழகத்தில் முதலாளிகள் செலுத்த வேண்டும்.

“தங்கும் விடுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன், “ஓமிக்ரான்” பற்றி புரிந்து கொள்ள அதிக நேரம் தேவை”

இதனை நிதி அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) தெரிவித்தது.

வர்த்தகங்களை ஆதரிப்பதற்கும், மேலும் உற்பத்தித்திறன் ஆதாயங்களை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

தொற்றுநோய் சூழலின்போது இதுவரை S$2 பில்லியனுக்கும் அதிகமான ஊதியக் கடன்கள் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சுமார் 98,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு WCS செலுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 20 வருடங்கள் பணிபுரிந்த வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த வீடு கனவு நிறைவேறியது!!