“ஊழியர்களை இதற்காக தொந்தரவு செய்யக்கூடாது!”… மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் MOM

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

லேசான அறிகுறிகளுடன் COVID-19 உறுதி செய்யப்பட்ட ஊழியர்களிடம் மருத்துவச் சான்றிதழ்களை கேட்டு தொடர்ந்து தொல்லை செய்யும் முதலாளிகள் குறித்து மனிதவள அமைச்சகத்திடம் (MOM) புகார் தெரிவிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று (மார்ச் 1) தெரிவித்தார்.

மருத்துவச் சான்றிதழ்களை கேட்டு முதலாளிகள் வற்புறுத்தினால், ஊழியர்களுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கர்னைன் அப்துல் ரஹீம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!

கிருமி தொற்றால் பாதித்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகள், பாலிகிளினிக்குகள் அல்லது பொது மருத்துவ கிளினிக்குகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் மருத்துவச் சான்றிதழைத் தருமாறு நிறுவனங்கள் கேட்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து தொந்தரவு செய்து மருத்துவச் சான்றிதழை கேட்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக ஊழியர்கள் புகாரளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற பதில்!