அழியும் நிலையில் உள்ள அரியவகை “மலாயன் தபீர்” சிங்கப்பூரில் காணப்பட்டது பெரும் மகிழ்ச்சி!

endangered-malayan-tapir-november/

அழிந்து வரும் அரியவகை விலங்கான “மலாயன் தபீர்” சிங்கப்பூரில் இன்று (நவ.22) அதிகாலை சாலையை கடக்கும்போது தென்பட்டதாக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

Singapore Wildlife Sightings என்ற ஃபேஸ்புக் குழுவில் தாம் அதை பார்த்ததாக Marcus Lee என்பவர் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

அதிகாலை 4:31 மணிக்கு அதனை பார்த்து புகைப்படம் எடுத்ததாக லீ பகிர்ந்துள்ளார்.

இது பொதுவாக இரவில் விழித்திருந்து பகலில் தூங்கும் விலங்கு இனம் என சொல்லப்பட்டுள்ளது.

அதனால் இவை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக செயல்படும்.  அதே போல, நீச்சல் செய்யும் திறன் இதற்கு அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் பொங்கோல் பார்க் கனெக்டரில் மலாயன் தபீர் தொடர்ச்சியாக இரண்டு முறை காணப்பட்டது.

அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – பொதுமக்களுக்கு NParks அறிவுரை

நீரில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் – அருகில் இருந்த மது பாட்டில்கள் & ஸ்னாக்ஸ்.. விசாரணை