சிங்கப்பூரில் Employment Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் எம்பிளாய்மன்ட் பாஸ் (EP) வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, வரும் செப்டெம்பர் 01, 2022 முதல் எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் S$4,500லிருந்து S$5,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

S Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!

மேலும், நிதிச் சேவைத் துறையில் Employmen Pass வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமும் $5,000-லிருந்து $5,500க்கு உயர்த்தப்பட உள்ளது.

திறமையுள்ள நபர்கள் வேலை அனுமதியில் இங்கு வருவதை உறுதி செய்ய சம்பள வரைமுறைகள் அவ்வப்போது மாற்றப்படுவதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார். மேலும், முதலாளிகள் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தரத் தயாராக உள்ளனர் என்பது அவர்களின் தரத்தை நடைமுறையில் எடுத்துரைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

S Pass மற்றும் Employmen Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் கடந்த செப்டம்பர் 01, 2020 அன்று கடைசியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்ற 10 பேருக்கு அபராதம்!