வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்ற 10 பேருக்கு அபராதம்!

Photo: HSA

மின்னணு வேப்பரைசர்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களை ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்றதற்காக 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மாதம் ஜனவரி வரை நடந்துள்ளது.

கத்தியுடன் போலீசாரை நோக்கி ஓடிவந்த ஆடவர்… சுட்டுப்பிடித்த போலீஸ் – திக் திக் வீடியோ!

இதில் சுமார் S$30,000 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) இன்றைய (பிப். 18) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 மற்றும் 36 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளுக்கு மொத்தம் S$104,800 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்கள் மின்னணு -வேப்பரைசர்கள் மற்றும் பொருட்களை வெளிநாட்டில் இருந்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை, பல்வேறு உள்ளூர் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்றுள்ளனர் என்று HSA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நாளை முதல் இவர்களுக்கெல்லாம் வழக்கமான பரிசோதனை இல்லை..!