அசால்ட்டாக வலம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி

equatorial-spitting-cobra
Complaint Singapore / FB

சிங்கப்பூர் குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலும் உடும்புகள் மற்றும் நீர்நாய்கள் போன்றவை வளம் வந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஆனால், பொங்கோல் பகுதியில் உள்ள HDB பிளாக்கில் நாகப்பாம்பு ஒன்று தென்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

சீறிக்கொண்டு படமெடுத்த அந்த கருநாகப்பாம்பின் புகைப்படம், Complaint Singapore என்ற பேஸ்புக் குழுவில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி அன்று பகிரப்பட்டது.

அதாவது, பிளாக் 422A நார்த்ஷோர் டிரைவின் கீழ்தளத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் நாகபாம்பு காணப்பட்டது.

சிலர் புகைப்படம் உண்மையானதா என சந்தேகித்தனர், சிலர் “போலி” என்று கூறி சித்தரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இருப்பினும், அந்த புகைப்படம் உண்மையானது என்றும், பலர் அதனை பார்த்ததாக ஒருவர் கருத்து கூறினார்.

இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை விஷத்தை பீச்சியடிக்கும் நாகப்பாம்பு ஆகும்.

இதுபோன்ற விஷ ஜந்துக்களை கண்டால், Acres வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புபின் தொடர்பு எண் 9783 7782 ஐ பொதுமக்கள் அழைக்கலாம்.

சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”