COVID-19: சிங்கப்பூரில் அனைத்து நுழைவுகளிலும் ERP கட்டணங்கள் நிறுத்தம்..!

(Photo : Today)

சிங்கப்பூர் முழுவதும் வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து நுழைவுகளிலும் மின்னணு சாலை கட்டணம் (ERP) வசூலிப்பது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம், பள்ளிகள் மற்றும் பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட உள்ளதை தொடர்ந்து போக்குவரத்து கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் ERP கட்டணங்கள் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்று சூழலில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது வரும் 7ஆம் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) அத்தியாவசிய சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 96 சதவீத நுழைவுகளில், மின்னியல் சாலை கட்டணம் (ERP) குறைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (மார்ச் 31) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த ERP கட்டணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.