“அனைத்து ஊழியர்களும் முக்கியம்”… ஊழியர்களுக்கு நன்றி – துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

everyworkermatters pre-Budget engagements
MCI Photos by Terence Tan/Facebook

சிங்கப்பூரின் பட்ஜெட் பிப். மாதம் 16 ஆம் தேதி அன்று வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிந்துகொள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களை சந்தித்து பேசினார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்

அதாவது தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள் மற்றும் ஊழியர்களுடன் ஒன்றாக சந்தித்து பேசியதாக அவர் Facebook பக்கத்தில் கூறியுள்ளார்.

முத்தரப்பு கூட்டாளிகளின் பெரும் ஆதரவுடன், பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று கூறிய திரு.வோங், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியது என்பதையும் திட்டவட்டமாக சுட்டிக்காட்டினார்.

சிறந்த வேலைகளை உருவாக்குவது முதல், திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் வரை, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும் அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கருத்துக்களை கவனமாக பரிசீலித்து பட்ஜெட்டை இறுதி செய்வோம் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்தார்.

அனைத்து ஊழியர்களும் முக்கியம் என்பதை அவர் தலைப்பாக வெளியிட்டு இருந்தார்.

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டுப் பயணிக்கு சிறை