வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் தங்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைய சேவை நேற்று முன்தினம் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

படிப்படியாக உயரும் ஊதிய முறை (PWM) அல்லது உள்ளூர் தகுதிச் சம்பளம் (LQS) ஆகிய முறைகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதைப் சரிபார்க்க அந்த தளம் உதவும்.

மேலும், முதலாளிகள் ஊழியர்களுக்கு ஒதுக்கிய PWM வேலை தர நிலைகள் எப்படி உள்ளது என்பதையும் அதில் பார்த்துக்கொள்ளலாம்.

படிப்படியாக உயரும் ஊதிய முறை (PWM) என்பது பயிற்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப உயரும் சம்பள உயர்வு முறை ஆகும்.

அதே போல, LQS என்பது வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) விதித்துள்ள ஊதிய வரம்பை குறிக்கும்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு குறைந்தது S$1,400 சம்பளம் கொடுக்க வேண்டும்.

குறைந்த ஊதியம் பெறும் 234,000 முழுநேர ஊழியர்களை அந்த தளம் உள்ளடக்கியுள்ளது.

PWM மற்றும் LQS திட்டங்களின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு இந்த புதிய தளம் பொருந்தும் என்று மூத்த அமைச்சர் ஜாக்கி முகமத் கூறினார்.

புதிய இணைய போர்டல் – go.gov.sg/pw-portal

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டுப் பயணிக்கு சிறை