பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

jail-molest-maid-lift man jailed

லிப்டில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதோடு மட்டுமல்லாமல், ஜாமீனில் வெளியே இருந்தபோது ஒருவரை உலோக சங்கிலியால் தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சொல்லப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டுப் பயணிக்கு சிறை

காபி கடையில் வெளிநாட்டு பணிப்பெண்ணை பார்த்த சிங்காரம் பழனியப்பன், அதன் பிறகு பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

லிப்ட் வரை பின்தொடர்ந்த சிங்காரம், அங்கு சிக்கிக்கொண்ட இளம் பெண்ணை கிட்டத்தட்ட 90 வினாடிகள் சில்மிஷம் செய்து துன்புறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த ​​சிங்காரம், ஆடவர் ஒருவரை தனது வலது கையில் சுற்றியிருந்த உலோகச் சங்கிலியால் மூன்று முறை குத்தி தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்தது, ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியது ஆகிய குற்றங்களையும் ஒப்புக்கொண்ட பின்னர் 60 வயது மதிக்கத்தக்க அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே போன்ற மற்ற நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வீட்டுப் பணிப்பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

லாரி, டாக்சி, கார் மோதி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி