சிங்கப்பூரில் ஜூலை முதல் நவம்பர் வரை மறுசுழற்சிக்காக 2,400,000 கிலோ மின்-கழிவுகள் சேகரிப்பு

e-waste-collected
Grace Fu / FB and Peter Dazeley / Getty Images

நாடு தழுவிய முதல் மின்-கழிவு மேலாண்மை அமைப்பை சிங்கப்பூர் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.

இது, விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) அணுகுமுறையின் ஒரு பகுதியாக உள்ளது.

“வேலை தேடுவோரிடம் S$450 வரை கட்டணம்” – சட்டவிரோதமாக இயங்கிய வேலைவாய்ப்பு ஏஜென்சி: சிறை, அபராதம் விதிப்பு!

நகர சபை, வணிக வளாகங்கள், HDB எஸ்டேட்ஸ், குடியிருப்போர் குழு நிலையங்கள், சமூக நிலையம், சூப்பர்மார்கெட்ஸ் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் 500க்கும் மேற்பட்ட மின்-கழிவு மறுசுழற்சி தொட்டிகள் தீவு முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.

அதே போல, 300க்கும் மேற்பட்ட பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிலையங்களும், அவற்றின் கடையில் மின்னணு கழிவு சேகரிப்பு சேவைகளை வழங்குகின்றன.

ALBA ஏற்பாடு செய்த மின்-கழிவு நிகழ்வில், சிங்கப்பூரின் மின்-கழிவு மறுசுழற்சி முயற்சிகள் பற்றிய அறிவிப்பை, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான மூத்த அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, ​​இந்த ஆண்டு ஜூலை 1 முதல் நவம்பர் இறுதி வரை சுமார் 2,400,000 கிலோ அல்லது 2,400 டன் மின்-கழிவுகள் ALBA மூலம் சேகரிக்கப்பட்டதாக கோர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!