இப்படியே போனால் ரொம்ப கஷ்டம் – வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிக்கு வெளியே செல்லவதில் புதிய நடைமுறை!

retrenchments-2024-increase-ntuc-measures

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம், சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் போக்குவரத்தில் மட்டுமே அவர்கள் பணிக்கு சென்றனர். விடுமுறை அல்லது ஓய்வு நாள்களில்கூட அவர்கள் விடுதிக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை.

ஏறக்குறைய இரண்டு வருடத்திற்கு பிறகு  கடந்த ஆண்டு செப்டம்பரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 500 வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கான எக்ஸிட் பாஸ் எனும் அனுமதிக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வார நாள்களில் 25,000 பேரும், வாரயிறுதி நாள்களிலும் பொதுவிடுமுறை நாள்களிலும் 50,000 பேரும் வெளியிடங்களுக்குச் செல்லலாம் என்று அரசு அறிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியே செல்ல வெள்ளிக்கிழமை (23/06/2022) முதல் எக்ஸிட் பாஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றுகூடிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடப்புக்கு வரும் மாற்றம் குறித்து மனிதவள அமைச்சின் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். தங்கும் விடுதிகளுக்கு இதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஈராண்டுகளாக அரசாங்கத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதால் கிருமிப்பரவலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வது குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.