சிங்கப்பூரில் திடீரென எகிறிய தொற்று பாதிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கிறதா.? – மருத்துவர்கள் விளக்கம்!

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (பிப்.04) நிலவரப்படி, புதிதாக 13,208 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. இதில் 13,046 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 162 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது.

திடீரென எகிறிய தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என உள்ளூர் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சீனப் புத்தாண்டு காரணமாக பல மருந்தகங்கள் மூடியிருந்ததாலும், சீனப் புத்தாண்டின்போது மருத்துவப் பரிசோதணை செய்துகொள்வது அபசகுணமானது என்ற நம்பிக்கை நிலவுவதாலும் கடந்த பிப்ரவரி 1, 2ம் தேதிகளில்
COVID-19 பரிசோதனை செய்துகொள்ளாமல் நேற்று முன்தினம் (பிப்.04) பலர் பரிசோதனை செய்துகொண்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து தெரிந்ததாக மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

பிப்ரவரி 04ம் தேதி அதிகரித்த COVID-19 பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தினாலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என்றும், கூடுதல் கட்டுப்பாடுகளுக்கான தேவை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை வழக்கம்போல் இயங்கியதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதை உணர முடிந்ததாக அம்மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார். பிப்ரவரி 04ம் தேதி பதிவான எண்ணிக்கையைக் கண்டு பீதி அடையத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

சீனப் புத்தாண்டுக்குப் பின் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அதிகரிப்பு தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு சவாளை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேன்டும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் மீது நமது கவனம் இருக்க வேண்டும் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் COVID-19 காரணமாக தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணரான பேராசிரிய டேல் ஃபிஷர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ள ஊழியர்கள், மாணவர்களின் கவனத்திற்கு…இனி இது தேவையில்லை – MOH அறிவிப்பு.!