ஆண்டிபட்டி to சிங்கப்பூர்… பறித்த 16 மணி நேரத்தில் விற்பனையாகும் வெண்டிக்காய் – அதிக லாபம் ஈட்டும் ஏஜெண்டுகள்

Export mung beans from Andipatti to Singapore
Tamil Media

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதாவது செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட 16 மணி நேரத்தில் விமானம் மூலம் அவை சிங்கப்பூருக்கு கொண்டுவரப்படுகின்றன.

அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் வெண்டிக்காய் ஏஜெண்டுகள் மூலமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டி.அணைக்கரைப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி, மூணாண்டிபட்டி, புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வெண்டிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிக்கு பாசிட்டிவ் ரிசல்ட்

சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெண்டிக்காய் சாகுபடி அங்கு நடைபெறுவதாக அப்பகுதி விவசாயி ஒருவர் கூறினார்.

நல்ல மகசூல் கிடைப்பதால் ஏஜெண்டுகள் நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கின்றனர்.

கிலோ 35 முதல் 40 வரை விலை போவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியாக சாகுபடி செய்வதாக கூறப்படுகிறது.

சுமார் 2 டன் வெண்டிக்காய் பறிக்கப்பட்டு, 15 முதல் 20 கிலோ கொண்ட அட்டைப்பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6 மணிக்கெல்லாம் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அவை அடுத்தநாள் காலையில் சிங்கப்பூர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற வினோத் குமார் உடல் – சாதிக்க வந்த இளைஞன் சவப்பெட்டியில்… கதறிய குடும்பம்