வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு விரிவான புது வசிப்பிடங்கள்: லாரன்ஸ் வோங்..!

‘Extensive’ plan to house recovered foreign workers: Lawrence Wong
‘Extensive’ plan to house recovered foreign workers: Lawrence Wong (PHOTO: MCI)

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் முந்தைய தங்கும் விடுதிகள் அல்லது வேறு இடங்களில் தங்கவைக்கப்படுவார்களா என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது, தொற்றிலிருந்து மீட்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்கும் வசிப்பிடம் பற்றிய திட்டம் உள்ளது. இது மிகவும் விரிவானது என்றும், இதில் புதிய தளங்கள் மற்றும் புதிய இடங்கள் உள்ளதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வாராந்திர டெங்கு சம்பவங்கள் அதிகரிப்பு – மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்: NEA..!

“COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்க புதிய தளங்கள் உருவாக்கப்படும், மேலும் இவை ஓரிரு ஆண்டுகளில் தயாராகும் என்றும், நீண்ட கால வசதிகளை உள்ளடக்கியது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட காலத்திற்கு மட்டுமின்றி குறுகிய, நடுத்தர காலத்திற்கும் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைக்க ஏற்பாடுகள் உள்ளன, என்றார்.

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவை லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளன, மேலும் அவர்கள் சமூக பராமரிப்பு வசதிகள் அல்லது மருத்துவமனைகளில் உள்ள பொது வார்டுகளில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

கிருமித்தொற்றில் இருந்து மீட்கப்பட்ட ஊழியர்களை தனித்தனியாக தங்க வைக்க வேண்டியதன் அவசியத்தை திரு வோங் மேலும் எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் Acacia Home உட்பட மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!