சிங்கப்பூரில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ள நிறுவனம்!

ExxonMobil workforce cut
Photo: AFP

ExxonMobil நிறுவனம், சிங்கப்பூரில் தனது 7 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றுநோயால் வழக்கமீறிய சந்தை நிலைமைகள் காரணமாக அது மறுசீரமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இனி இவர்களுக்கு Work Pass அனுமதி விண்ணப்பிப்பு கட்டாயம்!

2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 300 வேலைகள் பாதிக்கப்படும் என்று அந்த எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ExxonMobil நிறுவனம் சுமார் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கொண்டுள்ளது, நாள் ஒன்றுக்கு சுமார் 592,000 பீப்பாய்கள் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.

நிறுவனத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் இது கடினமான முடிவு என்றாலும், அவசியமான நடவடிக்கை என்று அதன் நிர்வாக இயக்குநர் திருமதி ஜெரால்டின் சின் கூறினார்.

பாதிப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு ஆதரவை வழங்குவதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு COVID-19 தொற்றுநோய் காரணமாக எண்ணெய் விலைகள் கடுமையாக சரிவை சந்தித்ததால் அந்நிறுவனம் 22.4 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது.

சிங்கப்பூருக்கு புதிதாக வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய நடவடிக்கை!