சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் - மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்
திரு. பொன்ராமன் ஏழுமலை

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயது கட்டுமான ஊழியர் கடந்த டிசம்பர் 2 அன்று வேலையிட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், ஊழியரின் உறவினர்கள் அவரின் மரணம் தொடர்பான விளக்கத்தை கேட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம்

திரு பொன்ராமன் ஏழுமலை என்ற அவர், சிங்கப்பூரில் உள்ள கான்கிரீட் பம்ப் குழாய் உதவியாளராக எட்டு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது TMC கான்க்ரீட் பம்பிங் சர்வீசஸ் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார்.

770 ஜூரோங் சாலையில் டெங்கா ஒருங்கிணைந்த ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அந்த வேலையிடத்தில் பணிபுரிந்த அவர், கான்கிரீட் பம்ப் டிரக்கின் சேஸுக்கும் அவுட்ரிக்கர் விசை கட்டைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

இந்த விபத்து டிசம்பர் 2 அன்று இரவு 11.20 மணியளவில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

பின்னர், அவர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காயங்கள் காரணமாக அவர் மறுநாள் இறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காயம் அவருக்கு ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் யாரும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்த மரணம் தமிழ்நாட்டில் உள்ள அவரின் குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளதாக ஊழியரின் மாமாக்கள் இருவர் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் பணிபுரிவதாகவும், இது பற்றி வெளியில் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தில் அவர்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

தாத்தா, பெற்றோர், ஒரு மூத்த சகோதரி மற்றும் 13 வயது சகோதரர் என ஒரு பெரிய குடும்பத்துக்கு திரு ஏழுமலை தான் ஒரே ஆதரவாக இருந்தார், அவர்களில் யாரும் வேலை செய்யவில்லை என்று அவரது மாமாக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து அவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர், அதிகாரிகள் இது பற்றி விசாரணைகள் மேற்கொள்வர் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“ஏன் ஆம்புலன்ஸ் அழைக்கப்படவில்லை, அவர்கள் ஏன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லவில்லை? அவ்வாறு செய்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம்,” என்ற கேள்விகளை அவரின் குடும்பத்தார் முன்வைத்துள்ளனர்.

விபத்து பற்றி குடும்பத்துக்கு தகவல் கூறிய மாமாக்கள், விபத்து நடந்த அதே இரவில் காயம் பெரிதாக இல்லை என்று நம்புவதாகவும், ஆனால் 24 மணி நேரத்திற்குள், அவர்களின் மருமகன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில், இங் டெங் போங் பொது மருத்துவமனை உள்ளது, இது ஐந்து முதல் 10 நிமிட தூரத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவரது குடும்பத்திற்கு தற்போது ஆயிரக்கணக்கான வெள்ளி கடன் பாக்கி உள்ளது. அந்த பணம் திரு ஏழுமலையின் கல்விக்கும், சிங்கப்பூர் வேலைக்கு வர கட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், “தற்போது குடும்பம் கடுமையான கஷ்டத்தில் இருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இதைப் பற்றி பேசுகிறோம், எங்களால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை,” என்று மாமாக்கள் கூறினர்.

இந்த மரணம் வருத்தமளிப்பதாக, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் டெங்கா டிப்போ திட்டத்தின் டெவலப்பர் ஆகியவை கூறின.

கடந்த டிச.,3ம் தேதி இந்த வழக்கில் குறித்து தகவல் கிடைத்ததாக கூறிய போலீசார், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதிச் செயல் எதுவும் நடந்ததாக சந்தேகம் இல்லை என கூறியுள்ளனர்.

வேலை அனுமதி சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஊழியர்: “கூடுதல் வேலை.. அதிக சம்பளம்” – கடும் நடவடிக்கை எடுத்த சிங்கப்பூர்