அதிபர் பதவியில் இருந்து விடைப்பெற்றார்….பிரியா விடை அளித்த இஸ்தானா ஊழியர்கள்!

Singapore president visit feiyue
Pic: File/Today

 

 

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரும், நாட்டின் 8வது அதிபருமான ஹலிமா யாக்கோப், ஆறு ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் (செப்.13) நிறைவடைந்த நிலையில், அந்த பதவியில் இருந்து விடைப்பெற்றார்.

காலணிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி! (வைரலாகும் வீடியோ)

69 வயதான ஹலிமா யாக்கோப், இஸ்தானாவில் பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி தனது நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன், ஊழியர்களுடம் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தார்.

அத்துடன், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கைக்கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, இஸ்தானாவில் இருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, இஸ்தானா மாளிகையில் ஹலிமா யாக்கோப்புக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், நாட்டு மக்களை மேலும் ஒன்றிணைக்க அதிபர் உதவியதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை – CCTV காட்சிகளில் அம்பலமான குற்றங்கள்

பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் உடன் குழு புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.