பிப்.14-ல் வரவு செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் நிதியமைச்சர்!

Singapore reopen borders
Pic: MCI's YouTube channel

2023- ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜெட்’ எனப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சரும், துணை பிரதமருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்ய உள்ளார்.

பொன்னியின் செல்வன் பாகம்- 2 எப்போது வெளியாகிறது?- அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்!

இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சிங்கப்பூர் நிதியமைச்சகத்துக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் விவரங்களை வீட்டில் இருந்தபடியே அறிந்துக் கொள்ளலாம்.

அத்துடன், முக்கிய அறிவிப்புகளும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் உடனுக்குடன் பதிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையா?”- இந்திய தூதரகம் விளக்கம்!

எனவே, சிங்கப்பூர் மக்கள், அரசின் வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பாக, https://www.reach.gov.sg/budget2023 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். வரும் ஜனவரி 13- ஆம் தேதி வரை மக்கள் தெரிவிக்கலாம் என அரசு குறிப்பிட்டுள்ளது.