பிப்.18- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி விழா!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது. இந்த கோயிலில் வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியையொட்டி, பிப்ரவரி 18- ஆம் தேதி மாலை 07.00 மணி முதல் பிப்ரவரி 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04.00 மணி வரை மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்’- பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி!

அப்போது, பக்தர்கள் பால்குடங்களை வழங்கலாம். இதற்கான கட்டணத்தைச் செலுத்தி பால்குடங்களுக்கான ரசீதுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 67434566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Photo: Hindu Endowments Board

மஹா சிவராத்திரியையொட்டி, பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று மாலை 06.15 மணி முதல் மாலை 07.15 மணி வரை தேவாரம் பாடல்கள், மாலை 07.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை வாத்ய விருந்து, இரவு 08.30 மணி முதல் இரவு 09.15 மணி வரை பரதநாட்டியம், இரவு 09.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பீஷானில் காக்கா கூட்டம் தாக்கியதில் 10 பேர் காயம்

பிப்ரவரி 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 11.45 மணி முதல் 12.30 மணி வரை பரதநாட்டியமும், அதிகாலை 12.30 மணி முதல் 02.30 மணி வரை சொற்பொழிவும், அதிகாலை 02.30 மணி முதல் 03.15 மணி வரை ஸ்ரீ சிவன் பக்தி பாடல்கள், அதிகாலை 03.15 மணி முதல் 04.00 மணி வரை பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து, சிவன் அருளை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் நடைபெறும் பூஜைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://heb.org.sg/events/sst_mahasivarathiri2023/?lang=ta என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.