உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வந்த பெண்ணை விமான நிலையத்தில் சுற்றி வளைத்துப் பிடித்த அதிகாரிகள்!

உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வந்த பெண்ணை விமான நிலையத்தில் சுற்றி வளைத்துப் பிடித்த அதிகாரிகள்!
Photo: Trichy Customs (Preventive) Commissionerate

 

உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வந்த பெண்ணை கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுற்றி வளைத்துப் பிடித்த வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்.

சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை மூடவுள்ள நிறுவனம் – 300 ஊழியர்களுக்கு வேலை இல்லை

கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வழியாக மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு (Coimbatore International Airport) ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனத்தின் TR 540 என்ற எண் கொண்ட விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த பெண் பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்த போது, அவர் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் கன்டுபிடித்தனர்.

பின்னர், சுமார் 175 கிராம் எடைக்கொண்ட பேஸ்ட் வடிவிலான தூய்மையான 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் அதிகாரிகள், அந்த பெண்ணையும் கைது செய்தனர். அவர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், மலேசிய நாட்டின் பாஸ்போர்ட்டை வைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துக்கு அனுப்ப வைத்திருந்த $3,400 பணத்தை ஏமாந்த “வெளிநாட்டு ஊழியர்” – கஷ்டப்பட்டு சம்பாரித்ததாக கண்ணீர்

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 11.25 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.