தீபாவளி ஒளியூட்டை பேருந்தில் சென்றவாறு கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

தீபாவளி ஒளியூட்டை பேருந்தில் சென்றவாறு கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், புத்தாடைகளையும், இனிப்புகளையும் கடைவீதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். இதனால் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைவீதிகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.

“மக்கள் ஏன் இவ்வளவு ரூடாக இருக்கிறார்கள்” – சிங்கப்பூர் வந்த சுற்றுலா பயணி கவலை

தீபாவளியை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வரும், லிஷா அமைப்பு, நடப்பாண்டிற்கான தீபாவளி ஒளியூட்டைத் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் உள்ள சாலைகளில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அலங்காரங்களை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், சிறுவர், சிறுமிகள் கண்டுக்களிக்கும் வகையில், ‘BIG BUS TOUR-2023’ என்ற பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளி ஒளியூட்டை பேருந்தில் சென்றவாறு கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

இந்த பேருந்து நாள்தோறும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையும், இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை என இரண்டு முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், சிறுவர், சிறுமிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘சென்னை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவை தொடங்கியது’- விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

அதைத் தொடர்ந்து, பேருந்தின் மேல் தளத்தில் பயணித்த பயணிகள், சாலையில் உள்ள அலங்கார தோரணங்களை புகைப்படங்களை எடுத்தும், கண்டு ரசித்தும் மகிழ்ந்தனர். பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் சென்றவாறு, ஜொலிக்கும் தோரணங்களை புகைப்படங்களை எடுத்தது நம்மால் காண முடிந்தது.