‘சூதாட்டத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறைவு’- ‘NCPG’ ஆய்வில் தகவல்!

TODAY File Photo

 

குறைவான சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றன. அதே நேரத்தில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று தேசிய சூதாட்ட கவுன்சில் (National Council on Problem Gambling- ‘NCPG’) நேற்று (29/07/2021) வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் சூதாட்ட வாய்ப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியது.

கடந்த 2020- ஆம் ஆண்டு சூதாட்ட பங்கேற்பு கணக்கெடுப்பின் படி, 44% சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள், கடந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு வகையான சூதாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றதாகக் கூறியது. கடந்த 2017- ஆம்ஆண்டு கணக்கெடுப்பின் போது 52% ஆக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

காந்தி உணவகத்தின் நிர்வாகம் மாறினாலும், உணவின் சுவை மாறாது!

இந்த குறைவு புள்ளி விவர ரீதியாக குறிப்பிடத்தக்கதாகும் என்று கவுன்சில் கூறியது. இங்குள்ள சூதாட்டத்தின் அளவு மற்றும் முறையை அறிய 2005- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 3,000 பேரிடம் கவுன்சில் கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால் முதல் கணக்கெடுப்பு நடத்தியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபடும் மக்களின் சதவீதம் 50% ஆகவே உள்ளது.

2017- ஆம் ஆண்டு கணக்கெடுப்பைப் போலவே, வாக்களித்தவர்களில் மிகவும் பிரபலமான விளையாட்டாக 4-டி தொடர்ந்தது. 34% பேர் 4-டி பந்தயம், அதைத் தொடர்ந்து டோட்டோ 31% பேர், சமூக சூதாட்டம் 16% பேர், குதிரை பந்தயம் வெறும் 1% பேர் மற்றும் சிலர் இங்குள்ள சூதாட்ட விடுதிகளில் உள்ள ஜாக்பாட்களில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் 0.3% பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூதாட்டக்காரர்களின் சராசரி மாதாந்திர பந்தையத் தொகை கடந்த 2017- ஆம் ஆண்டில் 30 சிங்கப்பூர் டாலராக இருந்த நிலையில், 2020- ஆம் ஆண்டில் 15 சிங்கப்பூர் டாலராகக் குறைந்துவிட்டது. 89% சூதாட்டக்காரர்கள் ஒரு மாதத்திற்கு 100 சிங்கப்பூர் டாலர் அல்லது அதற்கும் குறைவாக பந்தயம் கட்டியுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பேருந்தில் சிறுமி உட்பட 2 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட முதியவருக்குச் சிறை

கொரோனா காரணமாக, சூதாட்ட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதன்படி, கடந்த ஆண்டு சூதாட்ட நடவடிக்கைள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. குறிப்பாக, கேசினோஸ் போன்றவைச் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2017- ஆம் ஆண்டில் 0.1% உடன் ஒப்பிடும்போது, ​​2020- ஆம் ஆண்டிற்கான நோயியல் சூதாட்ட விகிதம் 0.2% ஆக இருந்தது. 2020- ஆம் ஆண்டிற்கான சூதாட்ட விகிதம் 1% ஆக இருந்தது. இது 2017- ஆம் ஆண்டில் 0.8% உடன் ஒப்பிடும்போது. இந்த வேறுபாடுகள் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கவை அல்ல.

சூதாட்டம் குறித்த கூடுதல் தகவல் அல்லது உதவிக்கு 1800- 6668- 668 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.ncpg.org.sg என்ற வெப்சாட் சேவை (Webchat Service) மூலம் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.