ஜூரோங் காபிஷாப்பில் சண்டை: ஆண், பெண் இருவர் கைது

ஜூரோங் காபிஷாப்பில் சண்டை: ஆண், பெண் இருவர் கைது
Facebook/SG Kaypoh人!

ஜூரோங்கில் உள்ள காபிஷாப்பில் கடந்த செப். 9 இரவு ஏற்பட்ட சண்டையில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

101 யுங் ஷெங் சாலையில் நடந்த இந்த சண்டை குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தமன் ஜூரோங் ஃபுட் ஹவுஸின் முகவரியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சம்பவத்தில் தொடர்புடைய 50 வயது ஆணும், 45 வயதுமிக்க அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணுக்கு உதவ வந்த நபர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாவதையும் வீடியோ வாயிலாக காண முடிகிறது.

அதன் பின்னர் அந்த நபர் இங் டெங் போங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.