கிம் மோ லிங்கில் தீ விபத்து – இருவர் மருத்துவமனையில் அனுமதி

fire at Ghim Moh Link block
Photo Credit: CNA reader

கிம் மோ லிங்கில் அமைந்துள்ள பிளாக் 28ல் இன்று காலை (ஆகஸ்ட் 16) தீ விபத்து ஏற்பட்டது.

அதன் காரணமாக மேல் தளங்களில் உள்ள வீடுகளும் தீயால் பாதிக்கப்பட்டன.

Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்

இதில் புகையை உள்ளிழுத்த ஒருவரும், சிறிய காயங்கள் ஏற்பட்டதாக ஒருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் நடந்ததாகவும், தீ விபத்து குறித்து தகவல் வந்ததாகவும் SCDF கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பிளாக்கில் இருந்த சுமார் 60 பேர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

விசாரணை நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்