ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து: வீட்டை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள்

singapore-changes-july scdf spf
SCDF/Facebook

சிங்கப்பூர்: Yuhua ஆரம்பப் பள்ளிக்கு எதிரே உள்ள பிளாக் 260 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 24ல் நேற்று சனிக்கிழமை (அக் 22) தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள நான்காவது மாடியில் உள்ள வீட்டில் பிற்பகல் 3.55 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சம்பளம் சரியாக பெறாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓடி உதவிய மனிதவள அமைச்சகம்: வாய்மூடி சம்பளத்தை கொடுத்த நிறுவனம்

இதில் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் கட்டாயமாக நுழைய வேண்டியிருந்தது. ஏனெனில் அந்த வீட்டுக்குள் யாரும் காணப்படவில்லை என்று SCDF கூறியது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் SCDF உறுதி செய்தது.

வீட்டின் படுக்கையறையில் தீ ஏற்பட்டதாகவும், பின்னர் தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பிளாக்கின் மூன்றில் இருந்து ஆறாவது தளம் வரை உள்ள சுமார் 30 குடியிருப்பாளர்கள் SCDF இன் வருகைக்கு முன் தானாகவே வெளியேறினர்.

பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்