யிஷூனில் உள்ள குடியிருப்பில் தீ…6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Fire at Yishun SCDF
Fire at Yishun - SCDF ( PHOTO by @safwan87)

யிஷூனில் நேற்று (டிசம்பர் 22) மாலை தீ விபத்து ஏற்பட்டது,  அதை அடுத்து அங்கிருந்து 25 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று இரவு 10:10 மணிக்கு Blk 146 Yishun Street 11இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

பயணிகளின் COVID-19 சோதனை முடிவுகளை துரிதமாக சரிபார்க்க புதிய செயலி – SIA

அதன் அருகிலேயே வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர் எடுத்த காணொளியில், அறை ஒன்றில் தீப்பிடித்து எரிவதை காணமுடிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 25 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

SCDF வருகைக்கு முன்னர் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் இருந்து ஐந்து குடியிருப்பாளர்கள் சுயமாக வெளியேற்றப்பட்டனர்.

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் S$2.3 மில்லியன் மதிப்புள்ள போதைபொருட்கள் பறிமுதல்!

இந்த குடியிருப்பு பிரிவில் வசித்த ஐந்து பேரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) அனுப்பப்பட்டனர்.

ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளானார், மற்ற 5 நபர்கள் புகையை சுவாசித்தில் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் ஆறு பேரும் சீராக நிலையில் உள்ளதாக SCDF தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

சிங்கப்பூரில் போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…