சிங்கப்பூரில் போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Suspected war relic found
Suspected war relic found (Photo: Google Maps Street View)

தாம்சனில் தரை வீடுகள் அமைந்துள்ள ஜாலான் ராபு சாலையில் போர் நினைவுச்சின்னம் என்று நம்பப்படும் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) பிற்பகல் 2 மணியளவில், வெடிகுண்டு குறித்து தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூரில் இதுவரை புதுவகை கொரோனா இல்லை; ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்”

சிங்கப்பூர் ஆயுதப்படை வெடிகுண்டு அகற்றும் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், வெடிகுண்டை பாதுகாப்பாக அகற்றுவதற்காக வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான காவல்துறை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் பயன்படுத்தப்பட்டவை என நம்பப்படும் வெடிகுண்டுகள் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில், ரிவர் பள்ளத்தாக்கிலுள்ள Jiak Kim ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட WWII வெடிகுண்டு ஒன்றை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர்.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடந்த 14 நாட்கள் சென்றிருந்த பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…