தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 30 பேர் வெளியேற்றம்

MHA

கான்பெர்ரா கிரசன்ட்டில் உள்ள HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்று பிப்ரவரி 24 அன்று நடந்த இந்த சம்பவத்தில் சுமார் 30 பேர் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த மாறி சேவை.. “S$50 முதல் S$150 கட்டணம்”.. கடைக்கு வெளியே நின்று கொண்டு ஆண்களை வற்புறுத்தி அழைக்கும் பெண்கள்

மதியம் 12:45 மணியளவில், பிளாக் 131C கான்பெர்ரா கிரசன்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து தண்ணீர் பீச்சியடிக்கும் கரூவி மூலம் தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட வீட்டின் படுக்கையறைக்குள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் அறிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது மற்றும் நான்காவது மாடியில் இருந்து சுமார் 30 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய விசாரணை தற்போது நடந்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை ரோட்டில் வைத்து தாக்கும் ஆடவர் – வெளியான வீடியோ: தகவல் கேட்கும் அமைப்பு