தீ விபத்து: 40 குடியிருப்பாளர்கள் காவல்துறையினர் உதவியால் வெளியேற்றம்

fire-pinnacle
SCDF/FB

Pinnacle@Duxton என்ற இடத்தில் உள்ள 34-வது மாடியில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 1E கண்டோன்மென்ட் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி Facebook பதிவை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வெளியிட்டது.

அன்று நவம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 8:35 மணியளவில் தீ விபத்து குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து நடந்தபோது, ​​வீட்டில் யாரும் இல்லை.

சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பிரிவுகளில் இருந்து சுமார் 40 குடியிருப்பாளர்கள் காவல்துறையினர் உதவியால் வெளியேற்றப்பட்டனர், அதன் பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் SCDF தெரிவித்துள்ளது.

SCDFன் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், எரிந்த எண்ணெய் விளக்குகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

எரியும் பொருட்களை கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்றும், வீட்டை விட்டு வெளியேறும் முன் அவற்றை அணைக்க வேண்டும் என்றும் SCDF பொதுமக்களை வலியுறுத்தியது.

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய ஊயர்வு!