குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய ஊயர்வு!

Pic: File/Today

சிங்கப்பூரின் தேசிய சம்பள மன்றம் 2021ம் ஆண்டில் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சம்பள முறை மாற்றத்தை, முத்தரப்பு பணிக்குழுவுடன் சேர்ந்து பரிசீலித்து தனது முடிவுகளை அறிவித்துள்ளது.

இதில் தேசிய ஊதிய மன்றத்தின் முடிவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் கோவிட்-19 தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நெருக்கடியால் சில துறைகள் மற்றும் சில நிறுவனங்கள் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த, தேசிய ஊதிய மன்றம் முயற்சி!

இதனால் ஊதிய உயர்வை பல நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் குறைந்த வருமான ஊழியர்களுக்கு S$50 வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தேசிய ஊதிய மன்றம் தெரிவித்தது.

ஒரு மாதத்திற்கு S$2000 வரை பெறும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு S$70 முதல் S$90 வரை, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேசிய ஊதிய மன்றம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் வேகமாக உயர்த்தப்பட வேண்டும் என்று தேசிய ஊதிய மன்றம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான ஊழியர்களின் ஊதிய உயர்வுகளை பற்றி செயல் நெறிமுறைகளை தேசிய ஊதிய மன்றம் வெளியிட்டது.

மேலும் முத்தரப்பு பணிக்குழு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட நெறிமுறையில் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மொத்த மாதாந்திர ஊதியம் வழங்குதல் முறையிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இதனுடன் அதிக நேரம் வேலை செய்ததற்கான ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் இதர தொகை வழங்குதல் ஆகியவையும் அடங்கியிருக்க வேண்டுமென்று பணிக்குழு தெரிவித்திருந்தது.

இதுபோன்று மாதம் $2000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான, மேற்கண்ட இந்த பரிந்துரைகளால் இன்னும் அதிகமான ஊழியர்கள் இம்முறையில் அனுமதிக்கப்பட்டு அதிக பயன் பெறுவார் என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்தார்.

சுரங்கப் பாதையின் சுவரில் கார் மோதியதால் தீ விபத்து!