ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த, தேசிய ஊதிய மன்றம் முயற்சி!

singaporeans-happiness survey
Photo: gov.sg

கோவிட்-19 தாெற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட தொழில் நெருக்கடி நிலையை சரிசெய்ய முயற்சி செய்யும் நிறுவனங்கள், சம்பள குறைவு ஏற்பட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை மீண்டும் சரியான முறையில் கொடுக்க முயல வேண்டும் என்று தேசிய ஊதிய மன்றம் எடுத்துரைத்துள்ளது.

மேலும் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட செலவு நெருக்கடியை சரிசெய்யும் நிறுவனங்கள், பணிகளில் தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு, ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்தலாம் என தேசிய ஊதிய மன்றம் தெரிவித்துள்ளது.

“வெளியில் நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி; இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது” – வெளிநாட்டு ஊழியர்கள்

தற்காலிகமாக ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குதல் போன்ற சம்பளம் சார்ந்த செலவுச் சேமிப்பு முறைகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று அம்மன்றம் கேட்டுக் கொண்டது.

கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து மீள முடியாமல் தடுமாறும் நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவிற்கு சம்பளம் சம்பந்தமில்லாத மற்ற செலவுச் சேமிப்பு முறைகளை செயல்படுத்த வேண்டும்.

மேலும் இந்த கோவிட்-19 தொற்றினால் ஊழியர்களும் அதிக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் ஆண்டு வருமானத்தில் சம்பளத்தை சற்று உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் சிங்கப்பூரின் தேசிய ஊதிய மன்றம் கேட்டுக் கொண்டது.

கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் பாதிக்கப்பட்ட தொழிற்பிரிவுகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு மேலும் பல பயிற்சிகளை அளித்து, தங்கள் நிறுவனதிற்குள்ளேயே வேறு சில புதிய வேலைகளை வழங்கி அந்நிறுவனங்கள் அந்த ஊழியர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கலாம்.

இதுபோன்ற முயற்சிகளை செய்வதன் மூலம், அந்நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் சிங்கப்பூரின் தேசிய ஊதிய மன்றம் தெரிவித்தது.

விடுதிகளுக்குள் பண்டிகை கொண்டாட்டம்: “குடும்பத்தை பார்த்து பல ஆண்டுகள் ஆச்சு” – ஏக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்