சுரங்கப் பாதையின் சுவரில் கார் மோதியதால் தீ விபத்து!

Photo: Coconut Co

சிங்கப்பூரில் சிலோத்தார் விரைவுச்சாலைக்கு செல்லும் மத்திய விரைவுச் சாலை பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையின் சுவற்றின் மீது, 33 வயதுடைய ஒரு பெண் ஓட்டிவந்த கருப்பு நிறமுடைய ஹோண்டா ஃபிட் கார் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது.

சுவரில் மோதிய கார் தீ பற்றி எரிவதற்கு முன், அவ்வழியாக சென்ற இருவர், கார் ஓட்டிவந்த பெண்ணை பாதுகாப்பாக, தீ விபத்திலிருந்து மீட்டெடுத்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனுக்காக வெளியே செல்லும் இடங்களும் விரிவு

விபத்து நடந்த சிறிது நேரத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும், சிங்கப்பூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்ட சற்று நேரத்தில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விரைந்து வந்த குடிமைத் தற்காப்பு படையினர், மிதமான அழுத்தத்தில் நுரையைப் பாய்ச்சி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வேறு எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீ பற்றுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட அப்பெண் சுயநினைவில் இருக்கும் போதே கூடெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கார் விபத்திற்கான விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலை பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையின் சுவற்றின் மீது கார் மோதியதால் தீ விபத்து ஏற்பட்ட இச்சம்பவம் பற்றிய வீடியோ இணைய வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மேலும் 3,003 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!