சிங்கப்பூரில் மேலும் 3,003 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Today

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (04/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (04/11/2021) மதியம் நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 3,003 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 3,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக அளவில் 2,780 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 220 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டு பயணிகள் மூன்று பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,10,978 ஆக அதிகரித்துள்ளது.

“அதிக உணவை வாங்க முடியவில்லை, மிகக் குறைவாகவே சமைத்தோம்” – தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்

கொரோனா பாதிப்பால் மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,683 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 286 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஐ.சி.யூ.வில் 138 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனுக்காக வெளியே செல்லும் இடங்களும் விரிவு

ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 66 பேரின் உடல்நிலை சீராக இல்லை. அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. 72 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து சுமார் 5,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.