“அதிக உணவை வாங்க முடியவில்லை, மிகக் குறைவாகவே சமைத்தோம்” – தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

சிங்கப்பூரில் இந்திய ஊழியர்கள் இந்த தீபாவளி பண்டிகையை நம்பிக்கை அடங்கிய கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரும்பாலான நாட்களில், திரு மதியழகன் கார்த்திகேயன் என்ற இந்திய ஊழியர் காய்கறிகள், சாதம் அடங்கிய எளிய உணவை சாப்பிடுவார்.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனுக்காக வெளியே செல்லும் இடங்களும் விரிவு

ஆனால், இன்று தீபாவளி தினத்தில், 38 வயதான ஊழியர் தனது தங்கும் விடுதி அறையில், கூடுதலாக $20 கொடுத்து, 1.5 கிலோ பூ நண்டை வாங்கி சமைத்து அதனை நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தார் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெஸ்ட்லைட் மாண்டாய் விடுதியில், திரு கார்த்திகேயன் மற்றும் அவரது சக ஊழியர்கள் மூவரும், ஒன்றாக நண்டு, மீன் மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை பகிர்ந்து உண்டு தீபாவளியைக் கொண்டாடினர். அனைத்தும் ஒரு அறையிலேயே முடிந்தது.

இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக ஒளி என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதே போல, திரு கார்த்திகேயன் மற்றும் நண்பர்களுக்கு இது நம்பிக்கையின் கொண்டாட்டமாகவும் இருந்தது.

“போன வருஷம் தீபாவளி சமயத்துல நாங்க ரூம்ல இருக்கதான் முடிஞ்சது” என்று அவர் கூறினார்.

“எங்களால் அதிக உணவை வாங்க முடியவில்லை, மிகக் குறைவாக சமைத்தோம். ஆனால் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமானது. இந்த ஆண்டு, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.”

அவர் 13 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிவதாகவும், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனது பெற்றோரை ஆறு ஆண்டுகளாக பார்க்கவில்லை என்றும் கூறினார்.

“நான் அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன், விரைவில் அவர்களைப் பார்க்க நான் திரும்பிச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி நன்கொடை – இந்திய ஊழியர்களுக்கு விருப்பமான பொருட்கள் திரட்டல்