வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி நன்கொடை – இந்திய ஊழியர்களுக்கு விருப்பமான பொருட்கள் திரட்டல்

Photo: Singapore Indian Chamber of Commerce & Industry/FB

இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடைகள் மற்றும் மிகவும் விருப்பமான பொருட்களை சேகரிக்கும் திட்டத்தை சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக மற்றும் தொழிற்சபை (SICCI) தொடங்கியது.

அதில் 250 கப் நூடுல்ஸ் அட்டைப்பெட்டி, 510 பாக்கெட் அப்பளம், விதவிதமான பானங்கள் மற்றும் பல பொருட்கள் நன்கொடை செய்யப்பட்டுள்ளது.

உணவங்காடி நிலையங்களில் அதிரடி சோதனை: விதிகளை மீறிய 76 பேர் சிக்கினர்

இவை அனைத்தும் தீபாவளி பண்டிகையின்போது வழங்கப்படும் உதவிகளின் ஒரு பகுதியாகும், மேலும் கோவிட் -19க்குப் பிறகு மீண்டுவரும் சூழலில் ஊழியர்களுக்கு உதவுவதை விட சிறந்த வழி இல்லை என்பதையும் அது குறிப்பிட்டது.

அதுகுறித்து SICCI-ன் தலைவர் டாக்டர் டி சந்த்ரூ கூறுகையில்; இந்த கடினமான கோவிட்-19 சூழலில் புலம்பெயர்ந்த ஊழியர் சமூகத்திற்கு உதவுவதற்கான இந்த முயற்சிகள் அனைத்தும் சிங்கப்பூர் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உதவும் முயற்சியின் ஒரு பகுதி, என்றார்.

“நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும், ஒவ்வொரு ஊழியரின் வியர்வையும் உழைப்பும் முக்கியமானது.”

“நமது வெளிநாட்டு ஊழியர்களும் அதில் வேறுபட்டவர்கள் அல்ல. எங்களால் முடிந்த அனைத்து உதவிகளுக்கும் அவர்கள் தகுதியானவர்கள்” என்றார்.

இதற்கான கடைசி நாள் “நவம்பர் 10” என்பதால் நன்கொடைகளை தொடர்ந்து வழங்கலாம்.

தொடர்புகொள்ள விவரம்: 96541346 என்ற எண்ணில் Ms Gowriஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது Ms Faridahக்கு faridah@sicci.com – மின்னஞ்சல் செய்யலாம்.

“இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என தமிழில் இந்திய மக்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் லீ!