உணவங்காடி நிலையங்களில் அதிரடி சோதனை: விதிகளை மீறிய 76 பேர் சிக்கினர்

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

கடந்த வாரத்தில் பல்வேறு உணவங்காடி நிலையங்களில், COVID-19 நடவடிக்கைகளை மீறியதற்காக 76 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) புதன்கிழமை (நவம்பர் 3) தெரிவித்துள்ளது.

இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களாக ஒன்றுகூடியது, 1மீ பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க தவறியது மற்றும் முகக்கவசம் அணியாதது ஆகியவை அந்த குற்றங்களில் அடங்கும்.

“இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என தமிழில் இந்திய மக்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் லீ!

கடந்த அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 2க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது தடுப்பூசி முழுமையாக போடாத இருபது நபர்கள் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தும்போது பிடிபட்டனர் என்று NEA ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி-வேறுபாடு நடவடிக்கை

தடுப்பூசி-வேறுபாடு நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 13 முதல் உணவங்காடி நிலையங்களில் நடைமுறையில் உள்ளன. அதன்படி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் உணவை பார்சல் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கடந்த வாரங்களாக உணவங்காடி நிலையங்களில் NEA சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஊடக வெளியீட்டில், அக்டோபர் 25 முதல் 31 வரை அதன் சமீபத்திய சோதனைகளில் COVID-19 நடவடிக்கைகளை மீறியதற்காக பிடிபட்ட 76 பேருக்கு எதிராக என்ன அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை NEA குறிப்பிடவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனில் அக்கறை செலுத்துவதில் MOM உறுதி