வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனில் அக்கறை செலுத்துவதில் MOM உறுதி

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

ப்ராஜெக்ட் DAWN பணிக்குழு கடந்த ஆண்டு நவம்பர் முதல் அரசு சாரா நிறுவனங்கள், சுகாதாரப் பங்காளிகள், முதலாளிகள் மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்பு அணுகுமுறையை உருவாக்கியுள்ளது.

இதன் பொருள் வெளிநாட்டு ஊழியர்களை கவனிப்பது ஆகும், அவர்களின் கவலைகளைக் கேட்பது, அதிக ஆதரவு தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு, பொருத்தமான பராமரிப்பு வழங்குவது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர்

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனில் அக்கறை செலுத்துவதில் மனிதவள அமைச்சகம் உறுதி கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மனிதவள அமைச்சகம் ஏற்படுத்துகிறது, மேலும் மனநலம் மற்றும் உளவியல் முதலுதவிக்கான பயிற்சியையும் விரிவுபடுத்துகிறது,” என்றார்.

அதனை கூடுதலாக அணுகக்கூடியதாக மாற்ற அமைச்சகம் அரசு சாரா அமைப்பின் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் டாக்டர் டான் கூறினார்.

மனநலப் பாதுகாப்பு தேவை என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள், ஆலோசனை ஹாட்லைன்கள் உட்பட அவர்களுக்கு தேவையான பொருத்தமான சேவைகளுடன் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 98 work permit அனுமதி பெற்றவர்கள் மனநலக் கழகத்தில் (IMH) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தங்கும் விடுதியில் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்பதால் கூடுதல் பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன – அமைச்சர்