முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர்

(Photo: Koh Mui Fong/TODAY)

சிங்கப்பூரில், முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் 61 மற்றும் 70 வயதுடைய இருவர் மீது இன்று (நவம்பர் 3) பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

தங்கும் விடுதியில் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்பதால் கூடுதல் பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன – அமைச்சர்

செவ்வாய்கிழமை காலை 10.50 மணியளவில், லோயாங் அவென்யூ வழியாக சென்ற பேருந்தில் இருந்த இருவரால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்னதற்காக கோபமடைந்த இருவரும் பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

அதனை அடுத்து அதே நாளில் பெடோக் போலீஸ் பிரிவு அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காததற்காக இரண்டு பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று SPF கூறியுள்ளது.

சட்டத்தின்கீழ் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

ஜனவரி-செப்டம்பர் இடையில் Work permit பெற்ற 98 வெளிநாட்டு ஊழியர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதி