தங்கும் விடுதியில் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்பதால் கூடுதல் பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன – அமைச்சர்

Photos: westlite.com.sg and Gowhereforsg/FB

வெஸ்ட்லைட் ஜாலான் துகாங் தங்கும் விடுதியில் ஜூரோங் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு பிறகு மற்ற போலீஸ் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக உள்துறை இணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறினார்.

ஜூரோங் போலீஸ் அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​நிலைமை வன்முறையாக மாறினால், மற்ற போலீஸ் பிரிவுகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் என்றும் மதிப்பிட்டனர்.

ஜனவரி-செப்டம்பர் இடையில் Work permit பெற்ற 98 வெளிநாட்டு ஊழியர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதி

அதனால் கூடுதல் போலீஸ் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன என்று டான் கூறினார்.

இருப்பினும், அங்கு கூடுதல் போலீஸ் பிரிவுகளை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

மேலும், சம்பவத்தின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் டான் தெளிவுபடுத்தினார்.

அங்கு ஊழியர்களில் ஒரு குழு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், அதனால் வன்முறைக்கு சாத்தியம் இருப்பதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து விடுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இறுதியில், ஜூரோங் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் MOM-இன் அதிகாரிகளுடன் சேர்ந்து, அந்த நிலைமையைத் சரி செய்ததாக டான் கூறினார்.

ஊழியர்களில் ஒரு குழு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் வன்முறை ஏற்பட்டிருக்கலாம் – அமைச்சர்