ஊழியர்களில் ஒரு குழு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் வன்முறை ஏற்பட்டிருக்கலாம் – அமைச்சர்

Photos: westlite.com.sg and Gowhereforsg/FB

வெஸ்ட்லைட் ஜாலான் துகாங் தங்கும் விடுதியில் அக்டோபர் 13ஆம் தேதி காவல்துறையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது குறித்த நாடாளுமன்றக் கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இன்று (நவ. 1) பதிலளித்தார்.

அந்த தங்கும் விடுதி சம்பவத்தில் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) எந்தெந்த பிரிவுகள் செயல்படுத்தப்பட்டன, அவற்றின் பங்கு என்ன, அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா ? என்று WP நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் மனாப்பின் கேள்விக்கு டான் பதிலளித்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு…

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, தங்கும் விடுதியில் உதவி வேண்டிய அழைப்புக்கு காவல்துறை பதிலளித்ததாக டான் கூறினார்.

மேலும், ஊழியர்களில் ஒரு குழு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், அதனால் வன்முறைக்கு சாத்தியம் இருப்பதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜூரோங் போலீஸ் பிரிவில் இருந்து ரோந்து போலீஸ் அதிகாரிகள் தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டனர், அங்கு மனிதவள அமைச்சகத்தின் (MOM) அதிகாரிகள் ஏற்கனவே இருந்தனர் எனவும் அவர் கூறினார்.

இறுதியில், ஜூரோங் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் MOM-இன் அதிகாரிகளுடன் சேர்ந்து, அந்த நிலைமையைத் சரி செய்ததாக டான் கூறினார்.

கார் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களைப் பிடிக்கச் சென்ற 5 காவல்துறை அதிகாரிகள் காயம்