வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு…

(PHOTO: Today)

விடுதிகளுக்குள் ஆபரேட்டர்களால் நிர்ணயிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிலையங்கள் அல்லது ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் மது அருந்த அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MOM அதிகாரிகள் தங்கும் விடுதிகளுக்கு அருகாமையில் அமலாக்க சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா சென்ற விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் – கோவில்களில் பிராத்தனை

விடுதிக்கு வெளியே குடிப்பழக்கம் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து கருத்துக்களை, சிலேத்தர் நார்த் லிங்கில் உள்ள PPT லாட்ஜ் 1Bஐ நிர்வகிக்கும் S11 தங்கும் விடுதி பெற்றுள்ளது.

விடுதியில் இருந்து வெளியேறும் மற்றும் திரும்பும் அனைத்து குடியிருப்பாளர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், உணவு விநியோக தளங்கள் வழியாக ஆர்டர்கள் செய்பவையும் சோதனை செய்யப்படுகின்றன.

மதுபானங்கள் இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருப்பினும், ஊழியர் தங்கும் விடுதிக்கு வெளியே மதுபானங்களைப் பெற முடிந்தாலோ, அவர்கள் வேலை முடிந்தவுடன் உடனடியாக தங்குமிடத்திற்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்தாலோ, அதில் எங்களால் தலையிட முடியாது” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

திருச்சி-சிங்கப்பூருக்கு இடையே செல்ல வேண்டுமா? சமீபத்திய விமான அப்டேட்